
நிறைய நிறைய ஆசையிருக்கு நிறைவேற்ற நாளுமிருக்கு
நீ மட்டும் அருகிருந்தால் நான் உசர போவேன் (புள்ள)
எனக்கு கஷ்டம் வரும் போது, துன்பம் கொஞ்சம் அரும்பும் போது
உன்ன மட்டும் நெனச்சுக்குவேன் உள்ளுக்குள்ள குளிந்துடுவேன்
ஊர் கூடி எனக்கெதிரா பொல்லாப்பு சொல்லும் போதும்
நீ சொல்லும் ஒத்த வார்த்தை என் உசிர தொட்டு பார்க்கும்.
சாகும் நொடி நெருங்கும் போதும் எமனே எதிர வரும் போதும்
உன்ன கொஞ்சம் பார்த்திருந்தா அவனக் கூட எதிர்திடுவேன்
நீ சொல்லும் வார்த்தை எல்லாம் உரமாக மாறிடுதே
விதைக்குள் இருந்து விருட்சமாக நாளை நானும் எழுந்திடுவேன்
ஓட்டக் குடிசையிலே நீ வச்ச மீன் கொழம்பு தேனாக இனிக்கயிலே
மோட்சத்த நான் பாத்தேன், மனசுக்குள்ள பூ பூத்தேன்
பத்திருக்கும் என் வயசு உனக்கப்போ எட்டிருக்கும்
விளையாட்டு தாலி கட்டி விதிய நானும் நிர்ணயிச்சேன்
நிக்காம ஓடுற நம்மூறு ஆத்துல வத்தாத தண்ணிபோல
உன் நினைப்பு எனக்கு புள்ள. கொஞ்சமாவது கொஞ்சிப்போவேன்
உனப்பிரிஞ்சு வருஷம் நாலோடிப் போனாலும் நம் காதல்
நினைவுகள் கழுத்துல கயிறாக இருக்குதடி கொஞ்சமாவது கொஞ்சிப்போவேன்
- jj jr
நீ சொல்லும் வார்த்தை எல்லாம் உரமாக மாறிடுதே
ReplyDeleteவிதைக்குள் இருந்து விருட்சமாக நாளை நானும் எழுந்திடுவேன்
nice :) :)
Gd One Jeno..:D
ReplyDeleteI like ur webpage and all ur poems jeno..:D i am looking for ur upcoming poems to enjoy..hope its seems awesome and Gd lck with it..:D
ReplyDelete