Friday, July 30, 2010

தேவதையே


எத்தனை மொழிகளை கற்றுவிட்டேன்
ஆனால் இன்னும் எழுதவில்லை- உன்
முகச்சுழிப்பிற்கு இணையான கவிதையை

என்னை நீ எந்தளவு விரும்புகின்றாய்
என்று எனக்கு தெரியாது- ஆனால்
என் அன்பின் அறிய அந்த
வானத்து நட்சத்திரங்களை எண்ணிப்பார்.

இதற்கு மேல் சொல்லமாட்டேன் இரவில்
வெளியே வராதே என்று. இப்போது பார்
அந்த வெண்ணிலவே மேகத்தின் நடுவில்
வெட்கப்பட்டு ஒளித்திருப்பதை

உன்னோடு இருக்கும் என்
பொழுகள் இப்போது மகிழ்ச்சியை
மட்டுமே அள்ளித் தருகின்றது.

உன்னை நினைத்து இரவின்
நீளங்கள் நீண்டு கொண்டே செல்கிறது

ஒவ்வொரு கணங்களையும் உனக்காக
மட்டும் வாழத்தோன்றுகிறது

என்காக நீ இருக்கிறாய் என
நினைக்கும் போது வாழ்க்கையை
வாழத்தோன்றுகிறது

நான் உனக்கு தரும் முத்தங்களில்
உள்ள அன்பை சொல்லி புரியவைப்பதெப்படி

அர்த்தம் இல்லாத எனக்கும் அன்போடு
காதலையும் தந்தாய்


-ஜெனோஷன்