Saturday, March 26, 2011

மறுபிறவி எடுத்து உன்ன எப்டியாச்சும் காதலிக்கணும் ஆனா அப்போவாச்சும் கைப்பிடிக்கணும்!!



தனியாய்ப் புலம்புகிறேன் அன்பே துணையாய் உடனே வா. வெண்ணிலவை தூது அனுப்புகிறேன் அது உன் அழகில் மயங்கி அங்கேயே அமர்ந்துவிடும் அதையும் கொஞ்சம் கூட்டி வா. என் உயிருக்கு உறவானவளே இன்றெப்படி உன்னால் புரியாத புதிராக முடிந்தது?

பிரிவுகளும் துரோகங்களும் என்கொன்றும் புதியவை இல்லை. அதனால் உன் பிரிவு என்னை பாதிக்கவில்லை என சொல்ல வரவில்லை என் ஒவ்வொரு நிமிடங்களையும் நீ சந்தோஷமான தருணங்களாக மாற்றுகிறாய் என சொன்னதால் தான் ஏனோ என் ஒவ்வொரு நொடியும் நோய்வாய்ப்பட வைத்து முடமாக்கி விட்டாய்

சின்ன சின்ன சண்டைகள் செல்லமான கோபங்கள் காதலுக்கு அவசியம் என நினைதேன். அது தேவதைகளின் காதலில் சாத்தியமற்ற ஒன்றோ? நீ தந்த நோட்டு புத்தகமும் உன்னிடமிருந்து திருடிய பேனாவும் மட்டுமே இன்று நீயில்லாத இந்த தனிமையை வெகு விமரிசையாக முத்தமிட்டு முத்தமிட்டு கொண்டாடுகின்றன. அவை முத்தமிட்ட இடமெல்லாம் உன் முகமும் பெயரும் தான். பாவம் அவைகளுக்கும் என்னைப்போல் உன்னைத்தவிர வேறொன்றும் அறியாதவை போலும்..




கொஞ்சம் வந்து கொஞ்சி விட்டுப்போவேன்.அதன் ஈரம் காயும் வரையாவது சந்தோசமாயிருகிரேன். உன்னுடனான என் காதல் என்னை மனிதனாக்கியது. இன்று உன் பிரிவு என்னைக் கவிஞன் ஆக்கியது. தயவு செய்து என்னுடன் வந்து கலந்து விடு. மனிதனையும் கவிஞ்சனையும் விட உன் காதலனாய் இருப்பதுவே பிடித்திருக்கிறது. எத்தனை எத்தனை கவிதைகளை எழுதினாலும் அதற்கு தனிமை என்ற தலைப்பே தவறின்றி பொருந்துகிறது. உன் மனம் இன்று மட்டும் குரங்காய் மாறக் கூடாதா? அது என்னுடன் சேர் என்று துடிக்க கூடாதா?

நேற்றிரவு சற்று பின்னிரவில் வெண்ணிலவை காணவில்லை வானெங்கும் தேடிப்பார்த்தேன் காணவில்லை. கடைசியில் அது எங்கிருந்தது தெரியுமா? அடிக்கடி நானும் நீயும் சந்திக்கும் தென்னை மரத்தோப்பில் கவலையாய் இருந்தது. ஹும்ம் என்னவென்று சொல்ல அந்தக்கதையை.. உனக்காய் தன்னை ஏற்கட்டுமாம் என்று அழுது புலம்பி கண்ணீர்க் கதை வடித்தது. பேதை நிலவுக்கு உண்மையாகவே தெரியாதா உன் வட்டப்பொட்டின் வடிவு கூட அதற்கு இல்லையென்று!!



நன் இருவரின் தனிமை இனிமையாகத்தான் இருந்தது அருகில் நீயிருந்து என் கண்ணீர் துடைக்கும் வரை!! இன்று மனதில் அணுவளவும் பலமில்லை அனால் அனுவாயுதமாய் உன் நினைவுகள் கொடுமை செய்கின்றன. அளவிட முடியாத இந்த சோகங்களை எங்கு நான் சொல்லி அழ கண்மணியே ? உன் விரலோரம் ஒரு இடம் தந்து விடு உன் மோதிரமாய் என் நாட்களிபேன். ஒரு முறை சொல் எனக்கு, தேன் இல்லாத பூக்களை கூட கண்டிருப்பாய் அனால் நீ இல்லாத என்னை கண்டதுண்டா ?


இந்த மடல் இறுதி மடலோ தெரியவில்லை, ஆனால் இதற்குமேல் நிரப்ப கண்ணீரும் இல்லை, வார்த்தைகளை செதுக்க கைகளில் பலமும் இல்லை!! நீதந்த உடல் மட்டும் மீதமாய் உன் நினைவுகளுடன் துடித்து கொண்டிருக்கிறது முடிந்தால் அதையும் வந்து எடுத்து விடு சீக்கரம். திரும்பவும் பிறந்து வளர்ந்து உன்ன எப்டியாச்சும் காதலிக்கணும். ஆனா அப்போவாச்சும் கைப்பிடிகனும்!!



1 comment:

  1. வார்த்தை
    இல்லை
    இக் கவிதைக்கு இணையாய் வர்ணிக்க

    ReplyDelete