Monday, May 3, 2010

நானும் கவிதைகளும்


காற்றில் காற்றாடியாய் இருந்த என்னையும்
காற்றில் கரைந்திருக்கும் வார்த்தைகளை
கோர்த்து கவிதை
ழுத தூண்டியது
இக் கவிதைகள் தான்.

என்னை சீர்செய்தவர்கள் பலர்!
வைரமுத்துவின் சிற்பியே உன்னை செதுக்குகிறேன்
உண்மையாகவே செதுக்கியது என்னை..
உண்மையாகவும் உளியாகவும் அவரின் ஒவ்வொரு
வைர வரிகளும் வரமாய் அமைந்தன எனக்கு.

இப்போதெல்லாம் மனம் கவிதைகளில் மூழ்க
முனைகிறது.கவிதைகளில் என்னை
தொலைக்கும் ஒவ்வொரு நொடியையும்
மனம் ஆவலாய் ஏதிர்பார்க்குறது.

என் வாழ்வில் பல சுமைகள்.அவை
ஒவ்வொன்றையும் கவிதைகளின் முற்றுப்புள்ளியில்
இறக்கி வைக்கின்றேன்.சுமைகளை
சுகமாக மாற்றும் இக் கவிதைகளும் என் உயிர் தான்

வேகமாக ஓடும் கால வெள்ளத்தில்
இந்த கவிதைகள் மட்டும் இல்லையெனின்
என்றோ காற்றில் கரைந்திருக்கும்
என் உயிர்

வாழ்வின் முடிவில் கடலின் தொடக்கத்தில்
நிற்கும் ஒவ்வொருவரும் கவிதைகளால்
செதுக்கப்படுவர். ஒவ்வொரு முடிவும் புது
தொடக்கம் என உணர்வர்.

ஆயிரம் நூல்களுக்கு சமம் அடிபட்டவனின்
அனுபவங்கள். எனவே இது அல்லல்பட்டு
அமைதியனவனின் புலம்பல்கள். சோதனைகள்
மனிதனை மேன்மேலும் மனிதனாக்குகிறது.

ஆரவாரமின்றி கவிதை படியுங்கள்
அது உங்களை சரியான திசையில் அமைதியான
கடலில் பயணிக்க வைக்கும் வாழ்வை
மாற்றும் நாளை மனிதனாகும் உங்களை

-ஜெனோஷ் ஜெயம்

4 comments:

  1. ஆரவாரமின்றி கவிதை படியுங்கள்
    அது உங்களை சரியான திசையில் அமைதியான
    கடலில் பயணிக்க வைக்கும் வாழ்வை
    மாற்றும் நாளை மனிதனாகும் உங்களை

    ReplyDelete
  2. ஆயிரம் நூல்களுக்கு சமம் அடிபட்டவனின்
    அனுபவங்கள். நன்றாக சொன்னீர்கள் தோழரே..

    ReplyDelete