Sunday, May 30, 2010

விண்ணைத்தாண்டி வருவாயா



''விண்ணைத்தாண்டி வருவாயா '' வந்துவிடு
உன்னை கண்டவுடன் புதிதாய் ஒரு மாற்றம்
முடிந்து போனது என நினைத்த ஒரு
கவிதை முற்றுப்புள்ளி வைக்கப்படாமல்
இருப்பதை அப்போதுதான் உணர்ந்தேன்

பல ஆண்களின் கவிதைத்தொகுதிகள்
உனக்கு சொந்தமானதாக இருக்கலாம்
ஆனால் என் இதயத்தில் வேலாய்
பாய்ந்த உன் கூரான
விழிகள் ஏற்படுத்திய காயங்களும்
உனக்குத்தான் சொந்தம்

பல வருடங்களாக உன்னை பார்த்து
அவஸ்தைப்பட்டு எழுதிய கவிதைகளைவிட
பல நாள் கழித்து உன்னை பார்த்த
அந்த நொடி இனிமையாய் இருக்கிறது

என் வாழ்வில் நீ
வைரமுத்துவின் முழு நீள காதல் காவியம்
பல நாள் கழித்து அம்மாவின் அன்பு
முத்தம்
நான் தேடித்திரிந்த தேவதை
பல லட்சம் வண்ணத்துப்பூச்சிகளின் சங்கம்

இசைஞானியின் இடைக்கால கீதம்
மழை நாள் இரவில் நெடுந்துார ஜன்னல்
பயணம்
உண்மை நண்பனின் பிறந்தநாள் பரிசு
தனியே நெடுஞ்சாலையில் முணுமுணுக்கும்
காதல் பாடல்

ஏ.ஆர் ரகுமானின் தமிழ்ப்பாடல்
உண்மை காதலர்கள் பல நாள் பிரிவின்
பின் சந்தித்த நொடிப்பொழுது
ரோஜா செடியின் முட்களை மறைத்து
வாசத்தை காட்டிய என்னவளே

மொத்தத்தில் நீ கௌதம் வாசுதேவ்
மேனன் இயக்கிய'' மின்னலே' ' ''பச்சைக்கிளி
முத்துச்சரமாய்'' இருக்க ''வாரணம் ஆயிரம்'' புடைசூழ ''விண்ணைத்தாண்டி வருவாயா'

--ஜெனோஷன்

Monday, May 3, 2010

நானும் கவிதைகளும்


காற்றில் காற்றாடியாய் இருந்த என்னையும்
காற்றில் கரைந்திருக்கும் வார்த்தைகளை
கோர்த்து கவிதை
ழுத தூண்டியது
இக் கவிதைகள் தான்.

என்னை சீர்செய்தவர்கள் பலர்!
வைரமுத்துவின் சிற்பியே உன்னை செதுக்குகிறேன்
உண்மையாகவே செதுக்கியது என்னை..
உண்மையாகவும் உளியாகவும் அவரின் ஒவ்வொரு
வைர வரிகளும் வரமாய் அமைந்தன எனக்கு.

இப்போதெல்லாம் மனம் கவிதைகளில் மூழ்க
முனைகிறது.கவிதைகளில் என்னை
தொலைக்கும் ஒவ்வொரு நொடியையும்
மனம் ஆவலாய் ஏதிர்பார்க்குறது.

என் வாழ்வில் பல சுமைகள்.அவை
ஒவ்வொன்றையும் கவிதைகளின் முற்றுப்புள்ளியில்
இறக்கி வைக்கின்றேன்.சுமைகளை
சுகமாக மாற்றும் இக் கவிதைகளும் என் உயிர் தான்

வேகமாக ஓடும் கால வெள்ளத்தில்
இந்த கவிதைகள் மட்டும் இல்லையெனின்
என்றோ காற்றில் கரைந்திருக்கும்
என் உயிர்

வாழ்வின் முடிவில் கடலின் தொடக்கத்தில்
நிற்கும் ஒவ்வொருவரும் கவிதைகளால்
செதுக்கப்படுவர். ஒவ்வொரு முடிவும் புது
தொடக்கம் என உணர்வர்.

ஆயிரம் நூல்களுக்கு சமம் அடிபட்டவனின்
அனுபவங்கள். எனவே இது அல்லல்பட்டு
அமைதியனவனின் புலம்பல்கள். சோதனைகள்
மனிதனை மேன்மேலும் மனிதனாக்குகிறது.

ஆரவாரமின்றி கவிதை படியுங்கள்
அது உங்களை சரியான திசையில் அமைதியான
கடலில் பயணிக்க வைக்கும் வாழ்வை
மாற்றும் நாளை மனிதனாகும் உங்களை

-ஜெனோஷ் ஜெயம்